கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடைகள் - அறநிலையத்துறை அறிவிப்பு

கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் புத்தாடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடைகள் - அறநிலையத்துறை அறிவிப்பு
Published on

சென்னை,

திருக்கோவில்களில் நடைபெறும் திருமணங்களில், மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், கோவில் மண்டபங்களில் வாடகையின்றி திருமணம் நடத்த ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே போல், திருக்கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் புத்தாடைகள் வழங்கப்படும் என மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

இதனை செயல்படுத்துவதற்கான உத்தரவை இந்து சமய அறநிலைத்துறை தற்போது பிறப்பித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியை திருக்கோவில்களின் வரவு, செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com