புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் எதிரொலி - சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை

சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .
புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் எதிரொலி - சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை
Published on

சென்னை

ஆங்கில புத்தாண்டு இன்று இரவு 12 மணிக்கு பிறக்கிறது. 2023ம் ஆண்டை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை , அண்ணா சாலையில் மாலை முதலே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com