இரவு நேர கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்

காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இரவு நேர கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இரவு நேர கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்
Published on

திருத்துறைப்பூண்டி:

காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இரவு நேர கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

அகல ரெயில் பாதை

திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-காரைக்குடியில் இருந்து சென்னைக்கு பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக இயக்கப்படும் இரவு நேர ரயில் ஆரம்பத்தில் போட்மெயில் என அழைக்கப்பட்டது. பின்னர் கம்பம் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரெயில் பாதைகள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் காரைக்குடி- சென்னை அகல ரயில் பாதையாக மாற்றப்படவில்லை. பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் காரைக்குடி அகல ரயில் பாதையாக அமைக்கப்பட்டும் இரவு நேர கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படவில்லை.

கம்பம் எக்ஸ்பிரஸ் ரெயில்

இந்த ரெயில் மூலம் காரைக்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை பகுதி மக்கள் மிகவும் பயன்பெற்று வந்தனர்.மேலும் முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. ஆகவே காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு நேர கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.இ்வ்வாறு அதில் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com