திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. கூட்டணியில் இருந்து விலகவில்லை- கே.எஸ். அழகிரி

திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. கூட்டணியில் இருந்து விலகவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறி உள்ளார்.
திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. கூட்டணியில் இருந்து விலகவில்லை- கே.எஸ். அழகிரி
Published on

சென்னை

நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஒன்றிய ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவியிடங்களை தராதது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டது.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப்போவதாவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுகவுடனான நட்பு எப்போதும் போல தொடருகிறது . திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. திமுக கூட்டணியில் இருந்து விலகவில்லை. அறிக்கையோடு முடிந்தது அது. திமுக- காங்கிரஸ் கூட்டணி கொள்கை கூட்டணி என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com