

சென்னை,
வண்டலூர் அருகே நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அவர் கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
*சுயநலத்திற்காக யாரும் இந்த இயக்கத்தை கூறுபோட விடமாட்டோம்.
*ஆட்சி கலைந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.
*எத்தகைய சவால்களையும் சந்திக்க தொண்டர்கள் ஓரணியில் இருக்க வேண்டும்.
சிலர் கொல்லைபுறமாக ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கின்றனர். அது ஒரு போதும் நடக்காது.
*எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆட்சியை யாரும் அசைக்க முடியாது.
*அதிமுக ஆட்சியும், கட்சியும் தமிழ் மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்.
*எங்களை எந்த சக்தியாலும் ஒடுக்கி விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.