கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் பங்கேற்க பிப்ரவரி 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் பங்கேற்க பிப்ரவரி 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
Published on

ராமநாதபுரம்,

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இது ராமேசுவரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டின் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவில் இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பேரும், தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேரும் என மொத்தம் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் பயணிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை இன்று முதல் வழங்கலாம் என ராமேசுவரம் புனித சோசப் தேவாலயத்தின் பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார். இதன்படி கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் பங்கேற்க பிப்ரவரி 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com