ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் அதிகாரி ஆய்வு

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் அதிகாரி ஆய்வு
Published on

ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பாளர், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங்பேடி நேற்று மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதில் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் 3 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிய பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜோலார்பேட்டை நகராட்சி சந்தைக்கோடியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினார். மருத்துவமனையில் உணவுகள் வழங்கப்படுவது குறித்தும் முறையான சிகிச்சைகள் குறித்தும் தாய்மார்களிடம் கேட்டார்.

பொன்னேரி ஊராட்சியில் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடம் பணியையும், மண்டலவாடி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 700 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள பணி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com