ஆபரேஷன் கஞ்சா வேட்டை: தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்

ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ஆபரேஷன் கஞ்சா வேட்டை: தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் கஞ்சா கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 2000 வங்கி கணக்கில் இருந்து சுமார் 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன என்றும் தென் மண்டலத்தில் மட்டும் 160 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் கஞ்சா வேட்டை சோதனைகளின் முடிவுகளில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com