பாலத்தில் சாய்ந்த லாரி

வேடசந்தூர் அருகே எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முயன்றபோது பாலத்தில் லாரி சாய்ந்தது.
பாலத்தில் சாய்ந்த லாரி
Published on

எரியோடு சிப்காட்டில் இருந்து பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் பவுடர் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று நாமக்கல் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. லாரியை செங்குறிச்சியை சேர்ந்த சிவமணி (வயது 60) என்பவர் ஓட்டி சென்றார். வேடசந்தூரை அடுத்த கருக்காம்பட்டி மேம்பாலம் அருகே வலது புறம் சர்வீஸ் ரோட்டில் லாரி சென்றது. அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரிக்கு வழி விடுவதற்காக லாரியை டிரைவர் பாலத்தின் ஓரமாக ஒதுக்கினார். இதில் லாரியில் பாரம் அதிகமாக இருந்ததால் பாலத்தை ஒட்டி இருந்த மண்ணுக்குள் லாரி இறங்கி சாய்ந்து நின்றது. இந்த விபத்தில் டிரைவர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com