42-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்


42-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்
x

பயணிகளின் விருப்பப் பட்டியலில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்னிலையில் உள்ளது.

சென்னை,

தமிழக ரெயில்வே வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1984-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலில் சென்னை எழும்பூர் -மதுரை இடையே இயக்கப்பட்டது. பின்னர் இந்த சேவை திருச்சி வரை குறைக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளாக திருச்சி-எழும்பூர் இடையே இயக்கப்பட்டது.

பின்னர் அப்போதைய மத்திய மந்திரி பி.சிதம்பரத்தின் முயற்சியால் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் காரைக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. காரைக்குடி, திருச்சி, லால்குடி, விழுப்புரம் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நிற்கும் இந்த ரெயில், தினசரி வேலைக்குச் செல்லும் அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு பெரும் பயனாக உள்ளது. பல ரெயில்கள் அறிமுகமானாலும் இதன் பயன் குறையவில்லை.

நேரத்தை காக்கும் பழக்கம், நம்பகமான சேவை மற்றும் நீண்டகால வரலாறு காரணமாக, பயணிகளின் விருப்பப் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. தமிழக ரெயில்வேயின் பெருமையாக தொடர்ந்து விளங்கும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 41-வது ஆண்டை நிறைவு செய்து, 42-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

வருங்காலங்களில் கூடுதல் வசதிகள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டால், இன்னும் பல ஆண்டுகள் இந்த ரெயில் தனது மகத்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். இதேபோல, கடந்த ஆகஸ்டு 7-ந்தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் 49-வது ஆண்டு நிறைவு செய்து, 50-வது ஆண்டிலும், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்டு 15-ந்தேதி 47-வது ஆண்டு நிறைவு செய்து, 48-வது ஆண்டிலும் அடியெடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story