ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள், வனத்துறை தொகுப்பூதிய ஊழியர்கள் மற்றும் கிராமபுற நூலகர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் அன்புக்குமார் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட செயலாளர் குப்புசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சையத் முஸ்தபா, ஜெயக்கொடி, ராமசாமி உள்ளிட்டோர் பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com