

நத்தம் தாலுகா செந்துறை பகுதியில் நேற்று காலை முதல் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதற்கு காரணம், செந்துறை துணை மின்நிலையத்தில் நேற்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடந்ததால் மின்நிறுத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை மின்வாரியம் முறையாக அறிவிப்பு வெளியிடவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்த திடீர் மின்சார நிறுத்தத்தால் விவசாயிகள், வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்தடைக்கு பின் மீண்டும் மோட்டாரை இயக்க, கிணற்றுக்கு செல்ல வேண்டி உள்ளதால், தண்ணீர் பாய்ச்சுவதில், சிரமம் ஏற்படுகிறது. மின்மோட்டார் பழுதடைய வாய்ப்பு உள்ளது. எனவே மின்தடை குறித்து அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வேண்டும் என்றனர்.