அன்னாசி பழங்கள் விற்பனை அமோகம்

கும்பகோணத்தில் அன்னாசி பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 2 பழங்கள் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
அன்னாசி பழங்கள் விற்பனை அமோகம்
Published on

கும்பகோணம்;

கும்பகோணத்தில் அன்னாசி பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 2 பழங்கள் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

அன்னாசி பழங்கள்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருந்து அறுவடை செய்யப்பட்ட அன்னாசி பழங்கள் விற்பனைக்காக கும்பகோணத்தில் குவிக்க வைக்கப்பட்டுள்ளன. பல வகைகளில் பல்வேறு சத்துக்கள் நிறைந்த பழங்களில் அன்னாசி பழமும் ஒன்று. இதில் மனித உடலுக்கு தேவையான தாது பொருட்கள். விட்டமின்கள், நார்ச்சத்துக்கள், உள்ளன. அன்னாசி பழங்கள் திண்டுக்கல், நாமக்கல், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயிர் செய்யப்பட்டு வருகின்றன.இந்த வகையில் கொல்லிமலையில் விளைவிக்கப்பட்ட அன்னாசி பழங்கள் கும்பகோணத்துக்கு நேற்று விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. 2 பழங்கள் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்னாசி பழங்களை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

சுவை அதிகம்

இதுகுறித்து பழ வியாபாரிகள் கூறியதாவது:-இயற்கையான முறையில் பழுத்த பழங்கள் கும்பகோணத்தில் விரைவில் விற்று விடும். கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விளைவிக்கப்பட்ட இந்த பழங்களை இங்கு உள்ள வியாபாரிகளிடம் மொத்த விலைக்கு விற்று நாங்கள் எங்கள் ஊருக்கு சென்று விடுவோம். ஆனால் இந்த முறை நேரடியாக பொது மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பழங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடங்களில் தரையில் போட்டு விற்பனை செய்து வருகிறோம். கொல்லிமலையில் இருந்து கொண்டுவரப்படும் அன்னாசி பழங்களுக்கு சுவை கூடுதலாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com