செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

குரோம்பேட்டையில் செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதில் சிறுமியை திருமணம் செய்ததாக கணவரும் சிக்கினார்.
செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
Published on

மேற்குவங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்த தர்போக் உசைன் (வயது 28) மற்றும் அவருடைய நண்பர் காலித் ஹசன் (24) இருவரும் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே திருமணமான தர்போக் உசைன், அதே மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்துகொண்டு குரோம்பேட்டை அழைத்துவந்து நண்பர் காலித் ஹசன் வீடு அருகே தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் குடித்தனம் நடத்தி வந்தார்.

இதற்கிடையில் நண்பனின் மனைவி என்றும் பாராமல் சிறுமி குளிப்பதை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்த காலித் ஹசன், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது, அந்த வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காலித் ஹசனை கைது செய்தனர். மேலும் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த தர்போக் உசேனும் கைது செய்யப்பட்டார். சிறுமியை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com