போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடி பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றிய ஜான்டஸ் பாபுனி நெல்லை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தென்பாகம் கபீர்தாசன் தூத்துக்குடி தெர்மல்நகருக்கும், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் இன்ஸ்பெக்டர்

பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றிய சுந்தரி கடையநல்லூர் குற்றப்பிரிவுக்கும், பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றிய பச்சமால் களக்காடுக்கும், சுரண்டை சுதந்திரதேவி மணியாச்சிக்கும், தூத்துக்குடி தெர்மல்நகர் தங்கராஜ் நாகர்கோவில் மதுவிலக்கு போலீசுக்கும், கன்னியாகுமரி கட்டுப்பாட்டு அறை திருநாவுக்கரசு தட்டார்மடம் போலீசுக்கும், கரிவலம்வந்தநல்லூர் ஹேமலதா ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும், செங்கேட்டை சியாம்சுந்தர் கூடங்குளம் போலீஸ் நிலையத்துக்கும், தட்டார்மடம் பவுலோஸ் வீரவநல்லூருக்கும், நாகர்கோவில் மதுவிலக்கு முத்துமணி பசுவந்தனைக்கும், முன்னீர்பள்ளம் தில்லை நாகராஜன் முறப்பநாடுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com