"வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்" - மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
"வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்" - மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி
Published on

சென்னை,

சென்னை தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலையில் 106 கோடி ரூபாயில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களை கண்காணிக்க 15 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாம்பலம் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது. கோடாவாக்கம், வளசரவாக்கம், வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான 880 பம்புகள், ஜே.சி.பி. உள்ளிட்ட கனரக வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல் மற்றும் நீர் நிலைகளில் மிதக்கும் தாவரங்களை அகற்றி, தூர்வாரும் பணிகளை பருவமழை காலத்திற்கு முன்னதாகவே விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com