வந்தவாசி
மோட்டார்சைக்கிள் மோதி பூசாரி பலியானார்.
வந்தவாசியை அடுத்த கடைசிகுளம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் சுப்பிரமணி (வயது 70). கோவில் பூசாரியாக வேலைப் பார்த்து வந்தார். நேற்று முனங்தினம் மாலை பால் வாங்குவதற்காக சென்றார். வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையை கடந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அங்கு இறந்து விட்டார். இது குறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.