பிரதமர் மோடி-அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் - செல்வப்பெருந்தகை பேட்டி

மோடி பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக,பேசி வருகிறார் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி-அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் - செல்வப்பெருந்தகை பேட்டி
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழ்நாட்டிற்கு சென்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தமிழர்கள் திருடர்கள் என்று மோடி பேசுகிறார். தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை மந்திரி அமித்ஷா பேசி இருக்கிறார்.தமிழ்நாட்டுக்கு வந்தால் திருக்குறள், இலக்கியம், இலக்கணத்தை பற்றி மோடி பேசுவார். மோடி பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக,பேசி வருகிறார் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பா.ஜ.க. தமிழகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை.ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டு மக்களிடம் மோடியும், அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், பா.ஜ.க அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்.இவ்வாறு கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com