தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கடலூரில் நாளை மறுநாள் நடக்கிறது
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து, உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளது.

எனவே இந்த முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் இருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com