தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
Published on

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19-ந் தேதி நடக்கிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தனியார்துறையில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் - மகளிர் திட்டம் இணைந்து மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கி குறு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முகாமில் மயிலாடுதுறை உட்பட பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ பட்டதாரிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். மேலும் இம்முகாமில் திறன் பயிற்சி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இணையதளத்தில் பதிவு

எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறவும், மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளுர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04364-299790 தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com