ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு; சென்னை உயர் நீதிமன்றம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு; சென்னை உயர் நீதிமன்றம்
Published on

சென்னை,

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தினர், ஆன்லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது ஆகும். டாக்டரின் பரிந்துரையில் மட்டுமே விற்கவேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆன்லைன் மருந்துகளின் ஆதிக்கம் அதிகமானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும்.

ஆன்லைன் மருந்து வணிகம் நடைமுறைக்கு வந்தால், மருந்து கடை தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சம் பேர் நேரடியாகவும், 40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என கூறி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவிக்கும் வரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய கூடாது என நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.

இதேபோன்று வரும் ஜனவரி 31ந்தேதிக்குள் வரைவு விதிமுறைகளை அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. இதை ஏற்றுகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டனர்.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்த தனிநீதிபதி உத்தரவை நிறுத்தி வைத்ததுடன், இந்த மனு மீது நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பினை ஒத்தி வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com