சொத்து தகராறு; 1-வது ,2-வது மனைவி குடும்பங்களுக்கு இடையே மோதல்- 2 பேருக்கு அரிவாள் வெட்டு

சொத்து தகராறில் முதல் மற்றும் இரண்டாவது மனைவியின் குடும்பங்களுக்கு இடையே நடந்த மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது.
சொத்து தகராறு; 1-வது ,2-வது மனைவி குடும்பங்களுக்கு இடையே மோதல்- 2 பேருக்கு அரிவாள் வெட்டு
Published on

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சேர்ந்தபூமங்கலம் பகுதியை சேர்ந்த பச்சைப் பெருமாள் என்பவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு சின்னத்துரை என்ற மகனும், இரண்டாவது மனைவிக்கு முனியசாமி என்ற மகனும் உள்ளனர்.

இதே போன்று மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பச்சைப் பெருமாள் இறந்துள்ளார். இதனை தொடர்ந்து பச்சை பெருமாள் பெயரில் உள்ள சொத்துக்களை பிரிக்கும் முயற்சியில் மூன்று மனைவியின் பிள்ளைகளும் ஈடுபட்டு வந்தனர்.

இதில் முனிசாமிக்கும், சின்னத்துரை குடும்பத்துக்கும் பிரச்சனை ஏற்ப்பட்டு உள்ளது. இந்த பிரச்சனை நாள் அடைவில் முன்விரோதமாக மாறி உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு சின்னத்துரையின் மகன் டார்வின்(வயது 23). ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் தனது நண்பரோடு பேசிக் கொண்டிருந்தார்

அப்போது அங்கு வந்த முனியசாமி டார்வினை ஆபாச வார்த்தையால் திட்டி தகராறு செய்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த முனியாசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, டார்வினின் தலை கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த டார்வின் நண்பனருக்கும் வெட்டு விழுந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆத்தூர் போலீசார் முனியாசாமியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com