திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரிக் உரிமையாளர் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரிக் உரிமையாளர் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
Published on

எலச்சிபாளையம்:

திருச்செங்கோட்டை அடுத்த புதுப்பாளையம் காந்தி ஆசிரமம் அருகே உள்ள புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37). இவருக்கு கவிதா (32) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பெரியசாமிக்கு சித்ரா என்ற அக்காள் உள்ளார். இவருடைய கணவர் சேகர் (48) என்பவரும், பெரியசாமியும் இணைந்து ஒரு நிறுவனத்தை கூட்டாக நடத்தி வந்தனர். இதில் ரிக் வண்டி மற்றும் சப்போர்ட் வண்டி என 2 வாகனங்கள் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பில் இருந்தது.

இந்த நிலையில் சித்ராவுக்கும், பெரியசாமிக்கும் சொத்து தகராறு ஏற்படவே ரிக் வாகனத்தை பெரியசாமி அக்காள் சித்ராவின் கணவருக்கு விட்டு கொடுத்து விடுவது எனவும் சொத்துக்கள் முழுமையும் பெரியசாமிக்கு சேர அவர்கள் விட்டு கொடுத்து விட வேண்டும் எனவும் பேசி முடிவு செய்யப்பட்டது. பின்னர் சேகருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் ஏற்படவே முடிவு ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சேகர், பெரியசாமிக்கு சொத்து ஆவணத்தை மாற்றி தராமல் அவருக்கு தெரியாமல் அப்போதைய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உதவியுடன் ரிக், சப்போர்ட் லாரியை தனது பெயருக்கு மாற்றியதாக தெரிகிறது. இதுகுறித்து பெரியசாமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லயைம்.

இதையடுத்து நேற்று பெரியசாமி தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தன்னுடைய ரிக் வாகனத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்து தரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அவர் கூறினார். இதனால் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com