கம்பு பயிரில் 3 அடி உயரத்துக்கு கதிர்

ஓமலூர் அருகே விவசாய தோட்டத்தில் கம்பு பயிரில் 3 அடி உயரத்துக்கு கதிர் வெளிவர தொடங்கி உள்ளது. இதனை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கம்பு பயிரில் 3 அடி உயரத்துக்கு கதிர்
Published on

ஓமலூர்:

ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை ஊராட்சி வாலியான் தோப்பு பகுதி சேர்ந்தவர் தனீஸ்வரன். விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு 110 நாளில் அறுவடைக்கு வரும் புதிய ரக கம்பான துருக்கி ரகத்தை பயிரிட்டிருந்தார். 45 முதல் 50 நாட்களில் கம்பு கதிர் வெளிவர தொடங்கியது. இதில் கம்பு கதிர் நீளம் 3 அடி முதல் 5 அடியாகவும், தட்டு 6 முதல் 7 அடி உயரமும் இருந்தது. இந்த புதிய ரக கம்பு கதிர்களை அக்கம்பக்கம் வசிக்கும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இது குறித்து விவசாயி தனீஸ்வரன் கூறும்போது, இந்த புதிய ரக கம்பை பயிரிட்டால் அதிக விளைச்சல் கிடைக்கும். சாதாரண ரக கம்புகளில் அடி உயரத்துக்கு கதிர் இருக்கும். ஆனால் இதில் சுமார் 3 முதல் 5 அடி உயரம் வரை கதிர் உள்ளது. 3 மடங்கு லாபம் கிடைக்கும். தற்போது 200 கிராம் விதை கம்பில் இருந்து சுமார் 300 கிலோ கம்பு கிடைத்துள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com