ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டபா.ம.க. ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டபா.ம.க. ஆலோசனை கூட்டம் அரக்கோணத்தில் நடந்தது.
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டபா.ம.க. ஆலோசனை கூட்டம்
Published on

அரக்கோணம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டபா.ம.க. ஆலோசனை கூட்டம் அரக்கோணத்தில் நடந்தது.

ராணிபேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரக்கோணத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரக்கோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சரவணன்(கிழக்கு), எம்.கே.முரளி (மேற்கு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருகிற 17-ம் தேதி (சனிக்கிழமை) வாலாஜாபேட்டைக்கு வருகை தரும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும். கிராமங்கள் தோறும் திண்ணைப் பிரச்சாரம் செய்து பா.ம.க.வின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். தற்போது உள்ள அரசு சட்ட விதிகள் படி 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டினை உடனே வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும என்பன உள்பட பல்வே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சட்டப் பாதுகாப்பு குழு துணைத்தலைவர் சக்கரவர்த்தி. மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா, மாவட்ட தலைவர் ஜெகந்நாதன், துணைச் செயலாளர் ராமசாமி, திருமால் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரக்கோணம் நகர செயலாளர் ஜெ.மணி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com