

பர்கூர்:
பர்கூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சிறுமி பலாத்காரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மோலமுடுகுவை சேர்ந்தவர் சிவா (வயது 26). கூலித்தொழிலாளி. இவரது வீட்டில் 14 வயது சிறுமி தங்கி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சிவா, அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, கடந்த 25.5.2022 அன்று இரவு பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து பெற்றோர் சிறுமியிடம் கேட்டனர். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
வாலிபர் கைது
அந்த சிறுமி 4 மாத காப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து அந்த சிறுமியின் சார்பில் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி சிவாவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.