

கோவில்பட்டி,
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், எம்.ஜி.ஆரை பழித்து பேசிய யாரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை என்றார். மேலும், எம்.ஜி.ஆரை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார் என்றும், நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயரா? என்று சவால் விடுத்தார். மனசாட்சிபடி நடிகர் கமல்ஹாசன் தனது ஊதியம் குறித்து கணக்கு சொல்லட்டும், நாங்களும் சொல்ல தயராக இருக்கிறோம் என்றும் கூறினார்.