வட்டார விளையாட்டு போட்டிகள்:கிறிஸ்தியாநகரம் பள்ளி மாணவர்கள் சாதனை

வட்டார விளையாட்டு போட்டிகளில் கிறிஸ்தியாநகரம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Published on

உடன்குடி:

மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் உடன்குடி கிறிஸ்தியாநகரம் றி.டி.றி.ஏ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 19 வயதிற்கு உட்பட்டேர் பூப்பந்தாட்டம், செஸ் போட்டியில் முதலிடமும், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடமும், இறகுபந்தாட்டத்தில் 14 வயதிற்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் முதலிடமும், 17 வயதிற்குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றனர்.

கபடி பேட்டியில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றனர். இதன்முலம் கபடி, பூப்பந்தாட்டம், இறகுபந்தாட்டம், செஸ் போன்ற போட்டிகளில் மாவட்ட அளவிலான பேட்டிகளில் விளையாட இப்பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ஆரோன்ராஜ், உதவி தலைமை ஆசிரியர்கள் சாந்தி எபனேசர், மைக்கேல், எட்வின் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிக்குமார், ஐசக் கிருபாகரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com