இரண்டாவது இயந்திரத்தில் பழுது: குழி தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குழி தோண்டும் இயந்திரத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இயந்திரத்தின் துளைபோடும் பிரமாண்ட குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது இயந்திரத்தில் பழுது: குழி தோண்டும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
Published on

சென்னை,

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 67 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது. நடுக்காட்டுப்பட்டி மீட்பு பணி நடைபெறும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது.

திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குழி தோண்டும் இயந்திரத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இயந்திரத்தின் துளைபோடும் பிரமாண்ட குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது.

குழந்தை 88 அடி ஆழத்தில் உள்ள நிலையில் ,பாறைகள் மிக கடினமாக இருப்பதால் இதுவரை 40 அடி மட்டுமே தோண்டப்பட்டுள்ளது

பாறையில் துளையிடும்போது ராக் டிரில்லிங் எந்திரம் உடைந்து பழுது ஏற்பட்டது. இரும்பு ரோப்பில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ராக் டிரில்லிங் உபகரணத்தில் பழுது ஏற்பட்டதால் ஆழ்துளை அமைக்கும் பணி சற்றுநேரம் நிறுத்தப்பட்டு புதிய ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

பழுதடைந்த உபகரணத்திற்கு பதிலாக ராக் டிரில்லிங் மிஷின் மாற்றப்பட்டது. ரிக் இயந்திரத்தை அகற்றிவிட்டு போர்வெல் இயந்திரத்தை பயன்படுத்தி துளையிட முடிசெய்யப்பட்டு, ஆழ்துளை அமைக்கும் தனியார் நிறுவன காஞ்சிபுரம் அலுவலகத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளது

சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com