குடியரசு தின விழா அணிவகுப்பு

பரதராமி அருகே குடியரசு தின விழா அணிவகுப்பு நடந்தது.
குடியரசு தின விழா அணிவகுப்பு
Published on

கே.வி.குப்பம்

பரதராமியை அடுத்த வி.எஸ்.புரத்தில் உள்ள ஜி.இ.டி, சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் அ.மாதவமூர்த்தி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார்.

பள்ளி செயலாளர் எம்.குருமூர்த்தி முன்னிலை வகித்தார். குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தை பரதராமி போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இசைக்கருவிகளுடன் ஊர்வலம் பரதராமி பஸ் நிலையம், தபால் ஆபீஸ் தெரு, பல்லேரிபல்லி தெருக்கள் வழியே சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது.

ஊர்வலத்தை பள்ளி உடற்கல்வி ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் வழி நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com