மெரினாவில் உலா வரும்போது கோரிக்கை: பஜ்ஜி கடைக்காரர் திருமணத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், அவ்வப்போது சென்னை மெரினா கடற்கரைக்கு செல்வது வழக்கம்.
மெரினாவில் உலா வரும்போது கோரிக்கை: பஜ்ஜி கடைக்காரர் திருமணத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

அப்படி செல்லும் போது, அங்கு வரும் பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வார்.

கடந்த வாரம் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உலா வரும்போது, கடற்கரை வளாகத்தில் பஜ்ஜி கடை வைத்திருக்கும் அஜித்குமார் என்பவரை சந்தித்து பேசினார். அப்போது தனது திருமணம் 25ந்தேதி (நேற்று) சாந்தோமில் நடக்க இருக்கிறது என்றும், அதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அஜித்குமார் கோரிக்கை விடுத்தார். அதனை மு.க.ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார்.

அதன்படி, நேற்று மாலை சாந்தோம் பகுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு நடந்த அஜீத்குமார்ஏஞ்சலினா சுசீலா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்தினார். அவரது திடீர் வருகை மணமக்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com