பட்டுக்கோட்டையில், ஜமாபந்தி

பட்டுக்கோட்டையில், ஜமாபந்தி நாளை தொடங்குகிறது.
பட்டுக்கோட்டையில், ஜமாபந்தி
Published on

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-பட்டுக்கோட்டை வட்டத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் கணக்குகள் முடித்தல்) நாள(வியாழக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை காலை 9 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின்படி நடக்கிறது. நாளை குறிச்சி சரகத்துக்கும், 16-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) திருச்சிற்றம்பலம் சரகத்துக்கும் 17-ந்தேதி(புதன்கிழமை) அதிராம்பட்டினம் சரகத்துக்கும், 18-ந்தேதி தம்பிக்கோட்டை சரகத்துக்கும் 19-ந்தேதி நம்பிவயல் சரகத்துக்கும், 23-ந் தேதி பெரியக்கோட்டை சரகத்துக்கும், , 24-ந்தேதி துவரங்குறிச்சி சரகத்துக்கும், 25-ந்தேதி மதுக்கூர் சரகத்துக்கும், 30-ந்தேதி பட்டுக்கோட்டை சரகத்துக்கும் ஜமாபந்தி நடக்கிறது. ஜமாபந்தி அலுவலராக தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கலந்துகொண்டு கிராம கணக்குகளை ஆய்வு செய்ய உள்ளார். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை விவரங்களை பொதுசேவை மையம் மூலம் இணையதளம் வாயிலாக தொவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com