வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு

வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.
வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
Published on

நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் பல்வேறு ரகமான வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று மார்க்கெட்டில் பூவன் வாழைத்தார் தார் ஒன்று ரூ.550 முதல் ரூ.800 வரையிலும், ரஸ்தாளி ரூ.500 முதல் ரூ.600 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.500 முதல் ரூ.650 வரையிலும், ஏலரிசி வாழை ரூ.250 முதல் ரூ.300 வரையிலும், பச்சை நாடன் ரூ.250 முதல் ரூ.350 வரையிலும், மொந்தன் ரூ.250 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது. செவ்வாழை பழம் ஒன்று ரூ.5 முதல் ரூ.7 வரையிலும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட தார் ஒன்றுக்கு ரூ.50 முதல் 100 வரை விலை உயர்ந்துள்ளது. அமாவாசைக்கு இன்னும் இரு தினங்களே உள்ளதாலும், வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com