மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்


மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்
x
தினத்தந்தி 23 Aug 2025 10:34 AM IST (Updated: 23 Aug 2025 10:48 AM IST)
t-max-icont-min-icon

மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி (30) உயிரிழந்தார்.

சென்னை

சென்னை,

சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக தற்போது தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ,சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் வேலைக்கு சென்ற நிலையில், கண்ணகி நகரில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் வரலட்சுமி (30) உயிரிழந்தார்.

இந்நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மின்சார வாரியம் சார்பில் ரூ.10 லட்சமும் , தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story