வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி - தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார்

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி - தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம் புகார்
Published on

சென்னை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் தியா சுபபிரியா. இவரது மகள் ரிதமீனா. இவர் வெளிநாட்டில் மருத்துவ படிக்க விருப்பப்பட்ட நிலையில், வெளிநாட்டில் மருத்துவ படிப்பு இருப்பதாக கூறி பிரவீன் மற்றும் சதீஷ் ஜனார்தனன் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். இவர்கள் மூலமாக சந்தானராஜ் மற்றும் கோகுல் ஆகியோர் ரிதமீனாவுக்கு அறிமுகமாகி வெளிநாட்டில் இருப்பதாக ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரைக்கூறி பெயரை அங்கு சீட் பெறுவதற்காக ரூ.21 லட்சத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவ சீட்டை உறுதிப்படுத்தி சேர்க்கை செய்துள்ளனர். கொரோனாவை காரணம் காட்டி மருத்துவம் முதலாமாண்டு படிப்பை மாணவி ரிதமீனாவை இங்கிருந்தே படிக்க வைத்துள்ளனர். 2-ம் ஆண்டு அங்கு சென்று பார்த்த போது, அங்கு அந்த பெயரில் ஒரு பல்கலைக்கழகமே இல்லை, சிறிய அளவில் ஒரு கட்டிடம் ஒன்றில் கல்லூரி செயல்படுவது போன்று போலியாக ஏற்பாடு செய்திருப்பதை அறிந்து ரிதமீனா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனா. இது குறித்து அந்த நாட்டில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் போல் யாரும் போலியான இந்த கல்லூரிகளை நம்பி ஏமாற கூடாது என்பதால் பாதிக்கப்பட்ட மாணவி ரிதமீனாவின் தாய் தியா சுபபிரியா தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com