

கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஜெகத்ரட்சகன் எம்.பி., ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சலவைப் பெட்டி, ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, இருளர் இன சாதி சான்று, முதியோர் உதவித் தொகை, பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின்கீழ் வீடு கட்ட உதவி, தென்னங்கன்று, விவசாயிகளுக்கு தார்ப்பாய் என ரூ.28 லட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, திட்ட இயக்குனர் லோகநாயகி, திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் சிவகுமார், தன்ராஜ், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, கலவை தாசில்தார் ஷமீம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் இந்துமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாஜலம், ஜெயஸ்ரீ, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலர் அசோக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.