

சென்னை,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மடத்துக்குளம் எம்.எல்.ஏ. மகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கதர் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கதர் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.