

சங்கராபுரம்,
சங்கராபுரம் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தி நடைபெற்றது.முன்னதாக சக்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர்.தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதே போன்று சங்கராபுரம் திரவுபதிஅம்மன் கோவில் வன்னி விநாயகர், செல்வவிநாயகர், வாசவி கோவில் வளாகத்தில் உள்ள மஹோற்கடகணபதி, பொய்க்குணம் சாலையிலுள்ள நவசக்தி விநாயகர் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹரசதுர்த்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது..