உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மேல்படிப்பு பயிலும் மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

திருவாரூர்;

மேல்படிப்பு பயிலும் மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

தமிழக முதல்-அமைச்சர், கடந்த மாதம் 5-ந் தேதி அரசு பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படித்து மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ. ஆயிரம் வழங்கும் புதுமை பெண் திட்டத்தை அறிவித்தார். இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள்.தற்போது இவ்வலைதளத்தில் (https://www.pudhumaipenn.tn.gov.in) முதல் ஆண்டு பயிலும் மாணவிகளும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த வலை தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.

நேரடியாக விண்ணப்பிக்க கூடாது

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே, இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி, வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் கல்விமேலாண்மை தகவல் திட்ட எண்ணிற்கான இ.எம்.எஸ்.ஜ. எண், மாற்று சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல்

மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் இருப்பின், சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9150056809, 9150056805, 9150056801 மற்றும் 9150056810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com