தமிழிசை குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடருவேன் - குஷ்பு

தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழிசை குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடருவேன் - குஷ்பு
Published on

சென்னை,

தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற ஒரு பழமொழி உண்டு. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அப்படித்தான். அவர் மீண்டும் மீண்டும் பெண்களை புண்படுத்தும் வகையில் அவதூறாக பேசி வருகிறார். குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களை மகிழ்விக்க இப்படிப்பட்ட நோயுற்ற மனப்பான்மை கொண்டவர்கள் தேவைப்படுவதால், அவரைத் திரும்ப அழைத்துக் கொள்வதற்காகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை 'சஸ்பெண்ட்' செய்துள்ளார்.

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, நான் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக வழக்கு தொடருவேன். மேலும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்ற கடுமையான பாடத்தை அவர் கற்பதை உறுதி செய்வேன். மீண்டும் நான் சொல்கிறேன். அவரைப் போன்ற ஆண்கள் அவர்கள் வளர்ப்பையே காட்டுகிறார்கள் மற்றும் தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களின் அவலத்தை காட்டுகிறார்கள்.

அக்கா தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.க.வின் மிகவும் மரியாதைக்குரிய உறுப்பினராக இருக்கிறார். மேலும் எங்கள் பா.ஜ.க. குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினராலும் மதிக்கப்படுகிறார். அறிவாலயத்தின் அலமாரியில் எலும்புக்கூடுகள் விழ ஆரம்பித்தால், இந்த முட்டாள்களுக்கு தங்கள் அசிங்கமான முகங்களை எங்கு மறைப்பது என்று தெரியாது. பெண்களை அவதூறு செய்வதில் தி.மு.க.வுக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com