நாமக்கல்லில் கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

நாமக்கல்லில் கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் அவதி
Published on

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இயல்பை காட்டிலும் அதிக மழை பெய்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் போதிய மழை இல்லை என்றாலும், பனியின் தாக்கம் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

நேற்று காலையில் பனி புகைமண்டலம் போல காட்சி அளித்தது. இதனால் காலையில் அருகே செல்பவர்கள் கூட தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மஞ்சள் விளக்கை எரியவிட்டாறு செல்வதை காணமுடிந்தது. குளிர்ந்த காற்றும் வீசியதால் கடும் குளிர நிலவியது. இதனால் அதிகாலையில் எழுந்து வேலைக்கு செல்பவர்கள் மற்றும் நடைபயிற்சி செல்வோர் அவதி அடைந்தனர். இவர்களில் பெரும்பாலான பேர் தலையில் குல்லா வைத்து கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது.

காலை 8.30 மணிக்கு பிறகே சூரியனின் கதிர்கள் பூமியில் விழ தொடங்கியது. அதற்கு பிறகே பனிமூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக விலகியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com