நெல்லையில் அனைத்து கல்குவாரிகளிலும் சிறப்புக்குழுவினர் ஆய்வு

நெல்லையில் நவீன லேசர் கருவிகளின் உதவியுடன் அனைத்து கல்குவாரிகளிலும் சிறப்புக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லையில் அனைத்து கல்குவாரிகளிலும் சிறப்புக்குழுவினர் ஆய்வு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான் குளத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில், கடந்த 14 ஆம் தேதி விபத்து ஏற்பட்டது. இதில் பாறை இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி, நெல்லையில் உள்ள அனைத்து கல்குவாரிகளில் சிறப்புக்குழு ஆய்வு செய்து வருகிறது. அதிநவீன லேசர் கருவிகள் மூலம் குவாரியின் நீலம், அகலம், ஆழம் ஆகியவை கணக்கீடு செய்யப்படுகின்றன.

ஆறு குழுவினர் தனித்தனியாக பிரிந்து 55 கல்குவாரிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தோண்டப்பட்டுள்ளதா? விதிமுறை மீறல்கள் உள்ளதா?, உரிமங்கள் சரியாக உள்ளதா? என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com