ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு...!

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு...!
Published on

நீடாமங்கலம்,

நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் இன்று குருவார வழிபாடு நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கலங்காமற் காத்தவினாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.

.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com