

சென்னை,
நடப்பு ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும் .பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கை குறித்த அடுத்த கட்ட அறிவிப்பு வெளியாகும்.
அக்.15க்குள் பொறியியல் கலந்தாய்வு நடைமுறைகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். விளையாட்டு பிரிவை சேர்ந்த மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக நேரில் வர வேண்டும். "மாணவர்கள் வீட்டிலிருந்தே சான்றிதழ் சரிபார்க்க வசதியாக மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 8000 மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் ஆன் லைனிலேயே சான்றிதழை சரிபார்த்தனர்.
தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகள் உள்ளன. மொத்த இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கலை அறிவியல் படிப்புகள் குறித்து 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்றார்.