துணை நடிகர் உள்பட 2 பேரிடம் ரூ.24 லட்சம், கார் பறிமுதல்

வாணியம்பாடி பள்ளி தாளாளர் கடத்தல் வழக்கில் சரண் அடைந்த சினிமா துணை நடிகர் உள்பட 2 பேரிடம் இருந்து ரூ.24 லட்சம் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
துணை நடிகர் உள்பட 2 பேரிடம் ரூ.24 லட்சம், கார் பறிமுதல்
Published on

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளராக உள்ளார். கடந்த மாதம் 19-ந்தேதி காலை உடற்பயிற்சிக்கு சென்ற இவரை காரில் வந்த மர்மநபர்கள் வழிமறித்து கடத்தி சென்றனர். பின்னர் கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் அருகில் மர்மநபரிடம் ரூ.50 லட்சம் கொடுத்து செந்தில்குமாரை மீட்டனர்.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த முத்து (27), கலீல் இப்ராஹிம் (32) ஆகிய 2 பேரை வாணியம்பாடி டவுன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் சினிமா துணை நடிகர் ஹரி (33), லாரி டிரைவர் உதயகுமார் (35) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஹரியும், 5-ந்தேதி திருவள்ளூர் கோர்ட்டில் உதயகுமாரும் சரண் அடைந்தனர். கோர்ட்டில் சரண் அடைந்த 2 பேரையும் வேலூர் மாவட்ட போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்களிடம் இருந்து ரூ.24 லட்சம், ஒரு லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள், கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணை முடிந்து 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com