பொள்ளாச்சி விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் நடைமுறைகள் நடந்து வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Published on

சென்னை,

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில்,

பொள்ளாச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பிப்பு, வழக்கு எப்போது ஒப்படைக்கப்படும்? என நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும் நடைமுறைகள் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

இதனிடையே "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த தமிழக அரசின் பரிந்துரை கடிதம் சிபிஐக்கு வந்து விட்டது. வழக்கை சிபிஐ விசாரிப்பது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரை கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுப்பி உள்ளேம்" என பாலியல் வழக்கு விசாரணை தெடர்பாக சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com