‘முத்தலாக்’ தீர்ப்பு பற்றி விஸ்வரூப அமைதி ஏன்? கமல்ஹாசனுக்கு, தமிழிசை கேள்வி

‘முத்தலாக்’ முறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இஸ்லாமிய சகோதரிகளின் உரிமை பாதுகாக்கப்பட்டிருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
‘முத்தலாக்’ தீர்ப்பு பற்றி விஸ்வரூப அமைதி ஏன்? கமல்ஹாசனுக்கு, தமிழிசை கேள்வி
Published on

சென்னை,

உச்சநீதிமன்றத்தில் முத்தலாக் முறைக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து, பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் பதிவு செய்துள்ள செய்தி வருமாறு:

முத்தலாக் முறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இஸ்லாமிய சகோதரிகளின் உரிமை பாதுகாக்கப்பட்டிருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை இஸ்லாமிய சகோதரிகளின் மனம் சார்ந்ததாக பார்க்கவேண்டுமே தவிர, மதம் சார்ந்ததாக பார்க்கக்கூடாது. காந்தி குல்லாவையும், காவி குல்லாவையும் முந்திக்கொண்டு அவசரமாக போட்டவர்கள் முத்தலாக் தீர்ப்பு பற்றி விஸ்வரூப அமைதி?????, ஒருதலை குல்லாவா?.

மேற்கண்டவாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com