தற்காலிக பணியாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி

தற்காலிக பணியாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தா
தற்காலிக பணியாளர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
Published on

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருபவர் சரவணன் (வயது 30) இவரது தந்தை பாலச்சந்திரன். இதே பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் சரவணனை பேரூராட்சியின் செயல் அலுவலர் தனுஷ்கோடி மற்றும் பேரூராட்சி தலைவரின் கணவர் நாராயணன் மற்றும் ஹரி என்பவர் உள்பட 3 பேர் தரக்குறைவாக பேசி தொல்லை கொடுத்தார்களாம்.

இதனால் மனமுடைந்த சரவணன் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வீடியோவாக எடுத்து என் சாவிற்கு 3 பேரும் காரணம் என்று கூறி நேற்று மதியம் விஷத்தை குடித்தார். பின்னர் அவர் விஷம் குடிக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது அது வைரலாக பரவி வருகிறது. விஷம் குடித்த சரவணன் தற்போது சிவகங்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜாவிடம் கேட்ட போது நடந்த நிகழ்ச்சிகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com