தஞ்சாவூர்: கர்ப்பிணி பெண்கள் 128 பேருக்கு வளைகாப்பு விழா...!

தஞ்சாவூர் அருகே கர்ப்பிணி பெண்கள் 128 பேருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.
தஞ்சாவூர்: கர்ப்பிணி பெண்கள் 128 பேருக்கு வளைகாப்பு விழா...!
Published on

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 128 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் தலைமைவகித்து பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மலர்தூவி வாழ்த்தினார்

அப்போது அவர் பேசியதாவது,

பெண்களுக்கு பிரசவம் என்பது மறுபிறப்பு எடுக்கும் நிலை. கர்ப்பிணி பெண்கள் சத்துள்ள உணவு உண்ண வேண்டும். கவலைப்பட கூடாது. 7-ம் மாதத்தில் வளைகாப்பு நடத்துவது அந்த மாதத்தில் தான் கருவில் இருக்கும் குழந்தைக்கு அறிவுவளர்ச்சி, மூளை வளர்ச்சி உண்டாகும்.

அதனால்தான் அந்த மாதத்தில் நடத்தப்படுகிறது. கைகளில் போடப்படும் கண்ணாடி வளையல் உடையாமல் காப்பது போல கருவில் இருக்கும் குழந்தையை காக்க வேண்டும்.

கைகளில் வளையல் ஓசை கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு உகந்தது. சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நல்ல முறையில் செய்து இருந்தவர்களை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com