வேலூரில் கைவிடப்பட்ட, பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட ஆட்சியர் உத்தரவு

வேலூரில் கைவிடப்பட்ட, பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
வேலூரில் கைவிடப்பட்ட, பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட ஆட்சியர் உத்தரவு
Published on

வேலூர்,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் மகன் சுர்ஜித் வில்சன் (வயது 2). வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 15 மணிநேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.

ஆழ்துளை கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில், வேலூரில் கைவிடப்பட்ட, பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூடும்படி ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டு உள்ளார். கடந்த வாரமே திறந்த நிலையில் இருந்த பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன என்று ஆட்சியர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com